Active restoration fosters better recovery of tropical rainforest birds than natural regeneration in degraded forest fragments
Ecological restoration has emerged as a key strategy for conserving tropical forests and habitat specialists, and monitoring faunal recovery using indicator taxa like birds can help assess restoration success. Few studies have examined, however, whether active restoration (AR) achieves better recove...
Saved in:
Published in | The Journal of applied ecology Vol. 59; no. 1; pp. 274 - 285 |
---|---|
Main Authors | , |
Format | Journal Article |
Language | English |
Published |
Oxford
Blackwell Publishing Ltd
01.01.2022
|
Subjects | |
Online Access | Get full text |
Cover
Loading…
Summary: | Ecological restoration has emerged as a key strategy for conserving tropical forests and habitat specialists, and monitoring faunal recovery using indicator taxa like birds can help assess restoration success. Few studies have examined, however, whether active restoration (AR) achieves better recovery of bird communities than natural regeneration, or how bird recovery relates to habitat affiliations of species in the community.
In rainforests restored over the past two decades in a fragmented landscape (Western Ghats, India), we examined whether bird species richness and community composition recovery in 23 actively restored (AR) sites were significantly better than recovery in paired naturally regenerating (NR) sites, relative to 23 undisturbed benchmark (BM) rainforests. We measured eight habitat variables and tested whether bird recovery tracked habitat recovery, whether rainforest and open‐country birds showed contrasting patterns, and assessed species‐level responses to restoration.
We recorded 92 bird species in 460 point‐count surveys. Rainforest bird species richness was highest in BM, intermediate in AR and lowest in NR. Contrastingly, open‐country bird species richness was least in BM, intermediate in AR and highest in NR.
Bird community composition varied significantly across treatment types with composition in AR in transition from NR to BM. Bird community dissimilarity between sites was positively related to dissimilarity in habitat structure and floristics, and geographical distance between sites. Variance partitioning indicated that structural and floristic dissimilarity explained 90% of the variation in community composition.
Indicator species analysis revealed significant associations of 34 species with one or more treatment types. Species associated with BM and AR treatment types were all rainforest species, while only 38% of species associated with AR and NR treatment types were rainforest species.
Synthesis and applications. We show that active restoration (AR) of degraded fragments benefits rainforest birds and reduces the infiltration of open‐country birds, and highlight the importance of considering rainforest and open‐country species separately. In human‐modified tropical rainforest landscapes, AR of degraded fragments fosters partial recovery and complements protection of mature forests for bird conservation.
Tamil
வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள காடுகளையும், அங்குள்ள வாழிடங்களில் மட்டுமே தென்படும் உயிரினங்களையும் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அங்குள்ள சீரழிந்த காடுகளை அறிவியல் பூர்வமாக மீளமைப்பது. அப்படி மீளமைக்கப்பட்ட காடுகள், நல்ல நிலையில் உள்ளனவா என்பதை அங்குள்ள உயிரினங்களை வைத்து மதிப்பிடலாம். பறவைகள் சூழலியல் சுட்டிக்காட்டிகள். குறிப்பிட்ட சில பறவை வகைகள் இருப்பதை வைத்து அவை இருக்குமிடத்தின் தன்மையை அறியலாம். சீரழிந்த காடுகளில் உள்ள பறவை வகைகள் மீண்டு வருவது அப்பகுதிகளை அறிவியல் பூர்வமாக மீளமைப்பதாலா அல்லது அங்குள்ள தாவரங்கள் இயல்பாகவே வளர்வதாலா என்பதைப் பற்றிய புரிதல் நம்மிடையே அதிகம் இல்லை.
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறைப் பகுதியில் உள்ள சீரழிந்த மழைக்காட்டு துண்டுச்சோலைகளில் சிலவற்றில் கடந்த இருபது ஆண்டுகளாக மீளமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற 23 இடங்களிலும், மீளமைப்புப் பணிகள் எதுவும் செய்யப்படாத சீரழிந்த மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும், சீரழியாத, நல்ல நிலையில் உள்ள 23 மழைக்காட்டுப் பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மழைக்காடுகளைச் சார்ந்த பறவைகள் 60 வகைகளும், வெட்ட வெளிகளை, சற்றே அடர்த்தி குறைந்த, திறந்த நிலையில் உள்ள காடுகளைச் சார்ந்த 32 வகையான பறவைகளும் ஆக மொத்தம் 92 வகையான பறவைகள் இக்கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. மழைக்காடுகளைச் சார்ந்த பறவை வகைகளின் எண்ணிக்கை நல்ல நிலையில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாகவும், மீளமைக்கப்பட்ட துண்டுச்சோலைகளில் நடுநிலையிலும், மீளமைக்கப்படாத துண்டுச்சோலைகளில் குறைவாகவும் இருந்தது அறியப்பட்டது. திறந்த நிலையில் உள்ள காடுகளைச் சார்ந்த பறவைகளின் வகைகளின் எண்ணிக்கை இதற்கு நேர் எதிராக இருந்தது.
மீளமைக்கப்பட்ட காடுகளின் பறவை சமூகம் மீளமைக்கப்படாத காடுகளிலிருந்து நல்ல மழைக்காடுகளின் பறவைசமூகத்தை நோக்கி மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம் வாழிடத்தின் அமைப்பும், மரங்களின் அமைப்பும் தான் என்பது அறியப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட வகையான பறவை தென்படும் வாழிடத்தை வைத்து அவ்வாழிடத்தின் தன்மையை அறியலாம். இவற்றை வாழிட சுட்டிக்காட்டிப் பறவை வகைகள் எனலாம். அப்படிப்பட்ட, மழைக்காடுகளில் மட்டும் தென்படும் பறவைகள், நல்ல நிலையில் உள்ள மழைக்காடுகளிலும், மீளமைக்கப்பட்ட மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும் மட்டுமே தென்பட்டன என்பது அறியப்பட்டது. ஆனால் மழைக்காட்டுப் பறவை வகைகளில் 38% மட்டுமே மீளமைக்கப்பட்ட துண்டுச்சோலைகளிலும், மீளமைப்புப் பணிகள் எதுவும் செய்யப்படாத சீரழிந்த மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும் தென்பட்டன.
கருத்துகளின் ஒருங்கிணைப்பும் அதன் நடைமுறைச் செயல்பாடும்: சீரழிந்து வரும் மழைக்காட்டு துண்டுச்சோலைகள் அறிவியல் பூர்வமாக மீளமைக்கப்படுவதால் மழைக்காட்டுப் பறவைகளுக்கு நன்மை பயக்கின்றது. அதே வேளையில் திறந்த நிலையில் உள்ள காடுகளைச் சார்ந்த பறவைகள் மழைக்காட்டுப் பகுதிகளில் ஊடுருவதையும் குறைக்கிறது. மீளமைக்கப்பட்ட பகுதிகளில், மழைக்காட்டுப் பறவை வகைகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டாலும் அவை முற்றிலுமாக மீண்டு வரவில்லை. பறவைகளின் பாதுகாப்பிற்கு, பாதுகாக்கபட்ட வாழிடங்களின் அருகில் உள்ள சீரழிந்த மழைக்காட்டு துண்டுச்சோலைகளை அறிவியல் பூர்வமான முறையில் மீளமைத்தலின் முக்கியத்துவத்தை, இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வாயிலாக அறியமுடியும். அதேவேளையில் பறவைகளின் பாதுகாப்பிற்கு, சீரழியாத, நல்ல நிலையில் உள்ள தொன்மையான மழைக்காட்டுப் பகுதிகளையும் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது என்பதையும் இந்த முடிவுகள் காட்டுகிறன.
We show that active restoration (AR) of degraded fragments benefits rainforest birds and reduces the infiltration of open‐country birds, and highlight the importance of considering rainforest and open‐country species separately. In human‐modified tropical rainforest landscapes, AR of degraded fragments fosters partial recovery and complements protection of mature forests for bird conservation. |
---|---|
Bibliography: | Handling Editor Gavin Siriwardena |
ISSN: | 0021-8901 1365-2664 |
DOI: | 10.1111/1365-2664.14052 |